சேலம் - வரத்து குறைந்ததால் இருமடங்காக உயர்ந்த பெரிய வெங்காயம் விலை
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் காய்கறி சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
Web Desk | August 28, 2020, 2:18 PM IST
1/ 5
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் காய்கறி சந்தைக்கு பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
2/ 5
தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடாகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
3/ 5
தற்போது ஊரடங்கு காரணமாகவும், அம்மாநிலங்களில் கனமழை பெய்து வருவதாலும், பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
4/ 5
இதனால் கிலோ 10 ரூபாய்-க்கு விற்பனையான பெரிய வெங்காயம் தற்போது 32 ரூபாயாக உயர்ந்துள்ளது.
5/ 5
விலை உயர்வால் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.