திருச்சி மாவட்டம் , இனாம் குளத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயம் பூசியுள்ளனர்.
2/ 4
மேலும் காலணி மாலையும் அணிவித்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
3/ 4
இன்று அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, பெரியார் சிலை தூய்மை படுத்தபட்டுள்ளது.
4/ 4
பெரியார் சிலை அவமதிக்கபட்டதைத் தொடர்ந்து, திமுக, திக கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.