முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » இதுதான் ரூல்ஸ்... மாதம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்காது.. வெளியான முக்கியத் தகவல்!

இதுதான் ரூல்ஸ்... மாதம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்காது.. வெளியான முக்கியத் தகவல்!

பெண்களுக்கான உரிமைத்தொகை என்பது 2021ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதியாகும். அதன்படி, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன்3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • 15

  இதுதான் ரூல்ஸ்... மாதம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்காது.. வெளியான முக்கியத் தகவல்!

  மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் இம்மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என முதல்வர் தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தார். பின்னர் மகளிர் தின வாழ்த்து தெரிவித்த முதல்வர் , வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

  MORE
  GALLERIES

 • 25

  இதுதான் ரூல்ஸ்... மாதம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்காது.. வெளியான முக்கியத் தகவல்!

  இந்த உரிமைத்தொகை என்பது 2021ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதியாகும். அதன்படி, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன்3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை என்றாலும் இது அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா? இந்த உரிமைத்தொகையை வாங்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற பல கேள்விகள் மக்களிடையே இருந்தது.

  MORE
  GALLERIES

 • 35

  இதுதான் ரூல்ஸ்... மாதம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்காது.. வெளியான முக்கியத் தகவல்!

  ரேசன் அட்டை விவரம்:
  அதன்படி அதன்படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும். அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  இதுதான் ரூல்ஸ்... மாதம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்காது.. வெளியான முக்கியத் தகவல்!

  புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை வழங்குவதிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
  குடும்பத்தலைவிகளுக்குதான் உரிமைத் தொகை என்பதால், ரேஷன் அட்டையில் எதுவும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது

  MORE
  GALLERIES

 • 55

  இதுதான் ரூல்ஸ்... மாதம் ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்காது.. வெளியான முக்கியத் தகவல்!

  யாருக்கெல்லாம் கிடைக்காது:
  அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது என்றுகூறப்படுகிறது. மேலும் வருமான வரி செலுத்துவோருக்கு இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடம்பெற மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES