அப்போது பேசிய அவர், “கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது. நீட் தேர்விற்கு உரிய மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கின்றோம். ஆளுநரோ, மத்திய அரசோ இது வரை அதற்கு அனுமதி வழங்கவில்லை. என்னுடைய ஆட்சி காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறவேண்டும் என்பது ஆசை. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்தாண்டு தேவையில்லை. இந்த ஆண்டுக்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். எதிர்க்கட்சி தலைவரோ, மக்களோ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். பெண்களுக்கான உரிமை தொகை மாதம் ஆயிரம் வழங்கப்படும். நிதி நிலைமை ஒழுங்காக வைத்திருந்தால் வந்தவுடன் கொடுத்து இருப்போம் என தெரிவித்தார்.