Marina Gandhi Statue | கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையில் 26.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, சென்னை மெட்ரோ திட்டத்தின் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக மெரினா கடற்கரையில் உள்ள, காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2/ 4
கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையில் 26.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, சென்னை மெட்ரோ திட்டத்தின் நான்காவது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, சென்னை கலங்கரை விளக்கத்தில் ஒரு ரயில் நிலையம் அமைய உள்ளது.
3/ 4
இதற்கான பணிகளின் போது அங்குள்ள காந்தி சிலை சேதமடைவதை தவிர்க்கும் நோக்கில், தற்காலிகமாக அதனை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
4/ 4
அதன்படி, அகற்றப்படும் காந்தி சிலையை ரிப்பன் மாளிகை வளாகத்தில் வைக்கவும், மெட்ரோ பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் அதனை கடற்கரை சாலையில் நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.