மேலும் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவித்தார். திருமண நிகழ்வை தொடர்ந்து மன்னார்குடியில் 26 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.