பொது விநியோகத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் அத்தியாவசியப் பண்டங்கள் விநியோகிக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டைதார்களுக்கு விரல்ரேகை பதிவு மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதோடு, அதனை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கண்காணித்தும் வருகிறது.
அதற்கு விளக்கமளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்திய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளின் ஆதார் எண், விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின் பொருட்கள் வழங்கப்படுகின்றது. விரல் ரேகை சரிபார்ப்பு வயோதிகம் போன்ற காரணங்களால் தோல்வியுறும்போது கையெழுத்துப்பெற்று பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வராத நிலையில், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாக பொருட்கள் வழங்கப்படுகிறது. 98.23% விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரல் ரேகை சரிபார்ப்பில் சிக்கல் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத்திட்டமாக நகரப்பகுதிகளில், ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் என்றார்.