இந்நிலையில் ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை, தலைசுற்றல் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடலை முழுமையாக பரிசோதித்த மருத்துவர்கள் குழு, மூளைக்குச் செல்லும் வழியில் ரத்த ஓட்டத்தில் அடைப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.