இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரி, ஒரு கிலே சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.