ராமநாதபுரம் ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 7 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
2/ 5
கேரள மாநிலம் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த 2 மாதங்களாக ஏர்வாடியில் தங்கி மனநல சிகிச்சை பெற்று வருகிறார்.
3/ 5
கடந்த செவ்வாய்கிழமை இரவு கழிவறைக்கு சென்ற அவரை வழிமறித்த சிலர் மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
4/ 5
இது தொடர்பாக பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் 17 வயதுக்குட்பட்ட 7 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
5/ 5
இந்நிலையில் ஏர்வாடி பகுதியில் சட்டவிரோத மது மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்திருப்பதே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.