இன்று மதியம் 2.45 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து விமான நிலையத்திற்குத் தனி விமானம் மூலம் பிரதமர் வந்தடைந்தார். சென்னைக்கு வருகை தந்த பிரதமரை முதலமைச்சர் , ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
2/ 17
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு அ.ராமசாமி எழுதிய “தமிழ்நாட்டில் காந்தி” என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைப் பிரதமருக்குப் பரிசாக அளித்தார்.
3/ 17
பின்னர், விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையத்தைத் திறந்து வைத்து, பிரதமர் பார்வையிட்டார்.
4/ 17
பிரதமர் மோடியில் கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குலுக்கித் தட்டிக்கொடுத்தார்.
5/ 17
முனையத்தில் உள்ள சிறப்பம்சங்களை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமருக்கு விளக்கினார்.
6/ 17
அதனைத்தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாகச் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்றார்.
7/ 17
வழி நெடுகிலும் குவிந்திருந்த பாஜக தொண்டர்கள் பிரதமருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
8/ 17
பல்லவன் இல்லம் அருகே மேள தாளங்கள் முழங்கப் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
9/ 17
சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமருக்குக் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
10/ 17
வந்தே பாரத் ரயிலுக்குள் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
11/ 17
தொடர்ந்து, அங்கே குவிந்திருந்த மாணவர்களைப் பார்த்து பிரதமர் மோடியும் முதலமைச்சர் ஸ்டாலினும் கையசைத்தனர்.
12/ 17
அங்கிருந்து மெரினா கடற்கரைச் சாலை வழியாக விவேகானந்தர் இல்லத்திற்குச் சென்றடைந்தார். அங்கு ராமகிருஷ்ணா மடத்தில் 125 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
13/ 17
அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தமிழ் மொழி, கலாச்சாரத்தை நேசிப்பதாகத் தெரிவித்தார்.
14/ 17
தொடர்ந்து, அங்கிருந்து பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இருவரும் ஒரே காரில் பயணித்து அடையாறு சென்றனர். அங்கிருந்து பல்லாவரம் அல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார்.
15/ 17
சுமார் 3, 700 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
16/ 17
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
17/ 17
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் பற்றிப் பேசினார். மேலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தால், இந்தியாவே வளர்ச்சி அடையும் என்று கூறி உரையை நிறைவு செய்தார். இதன் பின்னர், பிரதமர் மோடி விமானம் மூலம் மைசூர் புறப்பட்டார்.
117
பிரதமர் மோடியின் கையைப் பிடித்து தட்டிக்கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!