தமிழ்நாடு முழுவதும் சுமார் 33,222 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை இவற்றின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அரிசி அட்டை, சர்க்கரை அட்டை என சுமார் 1,96,16,093 அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.