கூட்டுறவுத் துறையில் பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு : அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Nagapattinam District | கூட்டுறவுத் துறையில் பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடுகளை கலைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
யில் கூட்டுறவுத் துறையில் பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடுகளை கலைய வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2/ 5
நாகப்பட்டினம் மாவட்ட கூட்டுறவுத் துறையில் பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடுகளை கலைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3/ 5
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.கோபாலகிருஷ்ணன் மாநிலத் தலைவர் பி.கே.சிவகுமார் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.
4/ 5
ஆர்ப்பாட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட விற்பனையாளர்கள் பதவி உயர்வு, பணி நியமன முறைகேடுகள், குறைபாடுகளை வலியுறுத்தி கூட்டுறவு நிர்வாகத்தை கண்டித்தும், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
5/ 5
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : பாலமுத்துமணி