கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் தமிழகம் முழுவதும் 7,19,895 நபர்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் 1,26,414 நபர்களும் , ஜூன் மாதம் 1,57,497நபர்களும், ஜூலை மாதத்தில் 2,61,529 நபர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
அதில், 4,52,188 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, 1,35,730 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,38,512 விண்ணப்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,13,676 ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும், 1,31,977 விண்ணப்பங்கள் வைப்பில் உள்ளதாகவும்,உணவு வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக, தென் சென்னையில் கடந்த 3 மாதங்களில் 49920 நபர்கள் விண்ணப்பித்ததில், 17728 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு,6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது, மேலும், 15687 நபர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதோடு ,2041 நபர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 3 மாதங்களில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 43,647 நபர்களும், சேலம் மாவட்டத்தில் 38,295 நபர்களும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், 15687 நபர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதோடு,2041 நபர்களுக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.