முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » அமைச்சர் விஜயபாஸ்கர் மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி... முதல்வர் பழனிசாமி பாராட்டு!

அமைச்சர் விஜயபாஸ்கர் மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி... முதல்வர் பழனிசாமி பாராட்டு!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கானா ஆளுநர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இசையமைப்பாளர் இளையராஜா, பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன்உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாராட்டியுள்ளனர்.

  • 14

    அமைச்சர் விஜயபாஸ்கர் மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி... முதல்வர் பழனிசாமி பாராட்டு!

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்-ரம்யா தம்பதியின் மகள் வி.ரிதன்யா பிரியதர்ஷினியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி, சென்னை சேத்துப்பட்டில் லேடி ஆண்டாள் கலையரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது.

    MORE
    GALLERIES

  • 24

    அமைச்சர் விஜயபாஸ்கர் மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி... முதல்வர் பழனிசாமி பாராட்டு!

    தொடர்ந்து 2.30 மணி நேரம் பரதம் ஆடி அசத்திய ரிதன்யா பிரியதர்ஷினிக்கு சிறப்பு விருந்தினர்கள் ஒன்றுசேர்ந்து பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கான நற்சான்றிதழை வழங்கினர்.

    MORE
    GALLERIES

  • 34

    அமைச்சர் விஜயபாஸ்கர் மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி... முதல்வர் பழனிசாமி பாராட்டு!

    அரங்கேற்ற நிகழ்ச்சியில் புஷ்பாஞ்சலி, ஜதிஸ்வரம், வர்ணம், கோபிகா கீதம், பாரதியார் பாடல், தில்லானா ஆகிய வடிவங்களில் ரிதன்யா பிரியதர்ஷினி பரதம் ஆடி அசத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர், நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி அடைவதாகவும், ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்த இக்கலை இந்தியாவை தாண்டி உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 44

    அமைச்சர் விஜயபாஸ்கர் மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி... முதல்வர் பழனிசாமி பாராட்டு!

    எந்த வித உணர்ச்சியையும் பரதநாட்டியத்தின் மூலம் உணர்த்த முடியும். ரிதன்யா பிரியதர்ஷினி அபிநயத்தை அதிக ஆர்வத்துடனும், நுட்பமாகவும் கவனித்தும், கற்றும் வந்திருக்கின்றார். நடனத்தின் பால் ஆர்வம் கொண்டிருக்கும் இவருக்கு கற்றல் எளிதாக வந்திருக்கின்றது. இவருக்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES