காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். இறுதியாக 2011ஆம் ஆண்டு ஜூன் 6ம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் உரிய தேதியான ஜூன் 12 -ல் தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது, மேட்டூர் அணையில் தொடர்ந்து 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு மேல் தண்ணீர் குறையாமல் இருந்து வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு உரிய தேதியில் மேட்டூர் அணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். வலதுகரை பகுதியில் மதகுகளை திறந்து வைத்த முதலமைச்சர், தண்ணீருக்கு மலர் தூவி வரவேற்றார். மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்