Home » Photogallery » Tamil-nadu
1/ 4


காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக கோவை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2/ 4


சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3/ 4


இந்நிலையில் வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா கடற் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், வடக்கு கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.