முகப்பு » புகைப்பட செய்தி » தமிழ்நாடு » 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

Rain Alert |

 • 111

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. (File Image)

  MORE
  GALLERIES

 • 211

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.(File Image)

  MORE
  GALLERIES

 • 311

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  கேரள, கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு , மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .(File Image)

  MORE
  GALLERIES

 • 411

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில், 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மின் இணைப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமாகின.(File Image)

  MORE
  GALLERIES

 • 511

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, விருத்தாச்சலம், வடலூர், பெண்ணாடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலையில் மூன்று மணி நேரமாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. திட்டக்குடியில் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் மழை நீர் தேங்கியது.(File Image)

  MORE
  GALLERIES

 • 611

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மலைப்பகுதி முழுவதும் மிதமான மழை பெய்தது. இதனால் மலைப்பகுதி முழுவதும் குளிர் நிலவி வருகிறது.(File Image)

  MORE
  GALLERIES

 • 711

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.(File Image)

  MORE
  GALLERIES

 • 811

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. கன மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பும் என்பதாலும் கோடை வெப்பம் தணிவதாலும் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.(File Image)

  MORE
  GALLERIES

 • 911

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டியது.(File Image)

  MORE
  GALLERIES

 • 1011

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதிகளில் திடீரென கனமழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கனமழை பெய்தது.(File Image)

  MORE
  GALLERIES

 • 1111

  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

  திருவாரூர் மாவட்டத்திலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், வெப்பம் தணிந்து இதமான வானிலை நிலவியது. தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள தங்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.(File Image)

  MORE
  GALLERIES