இந்நிலையில் மூன்றாவது கட்டமாக 2200 குஞ்சுகள் முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்தன, அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை மாவட்ட ஆட்சியரும் சட்டமன்ற உறுப்பினரும் இணைந்து கடலில் விட்டனர். இதுவரை மூன்று கட்டங்களாக 15,572 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள் இந்நாளில் இருந்து மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து இனப்பெருக்கத்திற்காக இதே கடற் பகுதிக்கு வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தார்.