மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2/ 7
இதையொட்டி, காலை 8 மணிக்கு அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து தி.முக.வினர் அமைதி ஊர்வலமாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
3/ 7
முதலாம் நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தி.மு.க அதிகாரப்பூர்வ இதழான முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
4/ 7
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.
5/ 7
கருணாநிதி உட்கார்ந்திருந்து எழுதுவது போன்ற வடிவில் அவரது சிலை அமைக்கப்பட்டிருந்தது.
6/ 7
இந்த நிகழ்வில் தி.க தலைவர் கி.வீரமணி, பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, வைரமுத்து உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.