தமிழகத்தில் நடக்கவிருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட நடிகர் விஜய் அனுமதி அளித்துள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் தேர்தல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, அண்ணா பிறந்த நாளில் மதுரை விஜய் ரசிகர்கள், நாட்டிற்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார், பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாயிருந்தார், அண்ணா யாரு தளபதி, மீண்டும் அண்ணா வேண்டும் அண்ணா, போன்ற வாசகத்துடன் அண்ணா புகைப்படத்தில் அவரது முகத்தில் விஜய் முகம் இடம்பெறும் வகையில் மார்ஃபிங் செய்து போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.