அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. அதேபோன்று ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தங்க காசு வழங்கப்படவுள்ளது.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன், கிராம மக்கள் மட்டும் பார்வையாளராக அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் சுற்றுலா துறை சார்பில் , வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து கண்டு ரசிப்பர். இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி இல்லை.
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு திடல் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது. இதனால் ஜல்லிகட்டு காளைகளை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் இம்முறை காளைகளை சிரமம் இன்றி கொண்டு வர, வாடிவாசல் பின்புறம் தடுப்புகள் அமைக்கப்பட்டு காளைகளுக்கு இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.