உதகை அருகே கூடலூரில் பிரசாரத்திற்காக வந்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ( படம்: நீலகிரி-ஜார்ஜ் வில்லியம் )
2/ 6
நீலகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகரஜனை ஆதரித்து கூடலூரில் பிரசாரம் மேற்கொள்வதற்காக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேற்று இரவு உதகை வந்தடைந்தார். (படம்: நீலகிரி-ஜார்ஜ் வில்லியம் )
3/ 6
இன்று காலை 9:30 மணிக்கு சாலை மார்கமாக கூடலூர் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி பிரசாரத்திற்காக துணை முதல்வர் மற்றும் அவர் பிரசாரம் செய்யும் வேன் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. (படம்: நீலகிரி-ஜார்ஜ் வில்லியம் )
4/ 6
பிரசாரம் மேற்கொள்ள கொண்டு வரப்பட்ட டெம்போ வாகனம் நடுவட்டம் என்னும் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தது. ( படம்: நீலகிரி-ஜார்ஜ் வில்லியம் )
5/ 6
அப்போது ஒட்டுநர் முத்து பாண்டி என்பரின் கட்டுபாட்டை இழந்து திடிரென வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.(படம்: நீலகிரி-ஜார்ஜ் வில்லியம் )
6/ 6
பிரசார வாகனத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பயணிக்கவில்லை. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. (படம்: நீலகிரி-ஜார்ஜ் வில்லியம் )