இந்தநிலையில் இன்று வழக்கம் போல தந்தை மற்றும் மகன் குடியிருப்பு பகுதியிலேயே வாகனத்தில் சென்றபோது, இருவரும் அமர்ந்திருக்கும் சீட் பகுதியில் புகை கிளம்பி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. உடனே சுதாரித்துக் கொண்ட இருவரும் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர். இறுதியில் தந்தை மகன் இருவரும் காயங்களின்றி தப்பிய நிலையில் அக்கம்பக்கத்தினர் வாகனத்தில் பற்றிய தீயை நீர் ஊற்றி அணைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.