கரூர் மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா... பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு (படங்கள்)
Maha Mariamman Temple | கரூர் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே புனவாசிபட்டியில் மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு குதிரையுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபாடு.
மாவட்டம், லாலாப்பேட்டை அருகே புனவாசிபட்டியில் மகாமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு குதிரையுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து வழிபாடு நடத்தினர்.
2/ 7
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
3/ 7
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கம்பம் நடும் விழாவுடன் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. 15 நாட்களாக தொடர்ந்து மண்டகப்படி சிறப்பு அபிஷேகம் தினந்தோறும் நடந்து வருகிறது.
4/ 7
அதனைத் தொடர்ந்து இன்று லாலாபேட்டை காவிரி ஆற்றிலிருந்து குதிரையுடன் தீர்த்த குடம், பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெற்றது.
5/ 7
இதில் புணவாசிப்பட்டி, நரசிங்கபுரம், காமாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
6/ 7
இந்த நிகழ்வைத் தொடர்ந்து இரண்டு செட்டு நாடகம் நடைபெற்றது.
7/ 7
முக்கிய நிகழ்வாக வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்பவனி, குதிரை குலுக்கும் மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். தி.கார்த்திகேயன்,செய்தியாளர்