கரூரில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு- உயிர் தப்பிய ஓட்டுநர்
Karur District | கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக காயமின்றி ஓட்டுநர் உயிர் தப்பினார்.
மாவட்டம், லால்குடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ( பாலமுருகன்) என்பவர், முசிறியில் உள்ள நண்பரை சந்தித்து விட்டு மீண்டும் குளித்தலை வழியாக திருச்சிக்கு இண்டிகா காரில் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
2/ 4
அப்போது குளித்தலை நாப்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் இன்ஜின் பகுதியிலிருந்து புகையுடன் நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது.
3/ 4
உடனடியாக சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு பாலமுருகன் காரை விட்டு இறங்கி விட்டார்.
4/ 4
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருந்தாலும் கார் முற்றிலும் எரிந்துவிட்டது. கார்த்திகேயன்,செய்தியாளர்