Home » photogallery » tamil-nadu » KARAIKUDI DOCTORS DONATE RS 13 LAKH FOR STUDENTS HIGHER EDUCATION SKV

ஊரடங்கால் படிப்பை இழந்த மாணவர்களுக்கு ரூ13 லட்சம் உதவி...காரைக்குடி மருத்துவர்களின் தளர்வில்லாத தொடர் சேவை

கொரோனா ஊரடங்கில் அன்றாட தேவைக்காக அல்லல்படுபவர்களுக்கு தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த அளவு உதவி வருகின்றனர். பாதிப்பின் மாதங்கள் நீண்டு கொண்டே செல்வதால் உதவி பெற்றவர்கள் அன்றாடம் வாழ்வாதாரத்திற்கே அல்லல்படும் சூழ்நிலை தொடர்கிறது. ஆதரவற்ற மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மேற்படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டி வருகின்றனர் காரைக்குடி கவிதா மகப்பேறு மருத்துவமனையின் மருத்துவர் ரமேஷ் மற்றும் அவரது மனைவி மருத்துவர் கவிதா.