தென் இந்தியாவில் பெரிய ஐம்பொன் சிலை ... தமிழக - கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு (படங்கள் )
கேரளாவில் பெளர்ணமி காவு கோயிலில் நடக்கும் காளியாகத்தில் பூஜித்து பிரதிஷ்டை செய்ய பட உள்ள தென் இந்தியாவின் பெரிய ஐம்பொன் சிலைக்கு தமிழக கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேரள மாநிலம் வெங்ஙானூர் பகுதில் பெளர்ணமி காவு கோயில் அமைந்துள்ளது.
2/ 7
இந்த கோயிலில் ஆயிரம் ஆண்டிற்கு பிறகு உலகில் முதன் முறையாக காளி யாகம் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.
3/ 7
இந்த யாகத்தில் தென் இந்தியாவில் மிக உயரமான பால திருபூல சுந்தரி, காளிதேவி சிலை, ஐம்பொன் சிலை, தஞ்சாவூரில் செய்யபட்டு கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா கொண்டு செல்லப்பட்டது.
4/ 7
மார்தாண்டம் பகுதியில் வைத்து சிலைக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
5/ 7
350 கிலோ எடை கொண்ட இந்த சிலை 51 கிலோ வெள்ளி , ஐந்து கிலோ தங்கம் உட்பட ஐந்து உலோகங்களால் செய்யபட்டதாகும்.
6/ 7
இந்ந சிலையோடு மயிலாடியில் செய்ய பட்ட சிவலிங்க சிலையும் கொண்டு வரப்பட்டது.
7/ 7
ஆறாம் தேதி முதல் நடக்கும் காளி பூஜைக்கு பிறகு இந்ந சிலைகள் மற்றும் ஆறடி உயரமான வேல் ஆகியவை அந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளது. செய்தியாளர் : சஜயகுமார்