Snake Viral | மீட்கும் போது கொத்திய நாகப்பாம்பு... தன் உயிரை பொருட்படுத்தாமல் நாகத்தை காப்பாற்றிய பாம்பு பிடி வீரர்
Snake Viral | குடியிருப்பு பகுதியில் வலையில் மாட்டிக்கொண்டு தப்பிக்க முடியாமல் உயிருக்கு போராடிய நாகப் பாம்பை மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டு குவிந்து வருகின்றது. குடியிருப்புக்குள் பாம்புகள் புகுந்தால் பொதுமக்கள் அதனை அடித்துத் தூக்கி புதைத்து விடாமல் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கேரளா மாநிலத்தில் தட்டாமல சந்தோஷ் என்று அழைக்கப்படும் பிரபல பாம்பு பிடி வீரர் சந்தோஷ் குமார் என்பவர் வலையில் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் போராடிய நாக பாம்பு ஒன்றை மீட்கும் போது நாகப்பாம்பு கடித்தது.
2/ 5
ஆனால் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு கடித்த பின்பும் அவர் கண்டுகொள்ளாமல் உயிரை துச்சமென நினைத்து அந்த பாம்பை வலையில் இருந்து மீட்டு ஒரு பாட்டிலில் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
3/ 5
அதன் பிறகு சந்தோஷ் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
4/ 5
கொல்லம் மயிலாப்பூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வலைக்குள் சிக்கிய பாம்பை சந்தோஷ் மீட்கும் போது இந்த சம்பவம் நடைபெற்றது.
5/ 5
சந்தோஷ் பாம்பை மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. செய்தியாளர் : சஜயகுமார் தனஜெயன் நாயர்