Home » photogallery » tamil-nadu » KANNIYAKUMARI DISTRICT KANYAKUMARI TERRIBLE CLASH DURING RAMADAN PRAYERS AT ENTRANCE OF POLICE STATION ARU
ரமலான் தொழுகை நடத்துவதில் பயங்கர மோதல்.. காவல் நிலைய வாசலில் அடி தடி..!!
Kannyakumari Ramzan | ரமலான் தொழுகை நடத்துவதில் கன்னியாகுமரியில் இரு தரப்பினர் இடையே மோதல். காவல் நிலைய வாசலில் கைகலப்பு. சாலை மறியல், போலீசார் பேச்சுவார்த்தை.
கன்னியாகுமரியில் கன்னியாகுமரி முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இங்கு இரு தரப்பினர் இடையே பல வருடங்களாக பள்ளிவாசலை நிர்வாகம் செய்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது .
2/ 9
இந்நிலையில் ஒரு தரப்பினர் நேற்று ( 2.5.22 திங்கள்) ரமலான் சிறப்பு தொழுகை நடத்தினர்.
3/ 9
இதையடுத்து இன்று மற்றொரு தரப்பு சார்பில் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் காரணமாக பிரச்னை ஏற்படும் என கருதி இரு தரப்பினரையும் அழைத்து இரவு கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
4/ 9
நிர்வாகிகள் காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த நேரத்தில் வெளியே இருந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
5/ 9
காவல் நிலையம் முன்பு சாலையில் இருதரப்பினர் மோதி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
6/ 9
பின்னர் காவல் துறையினர் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
7/ 9
இச்சம்பவம் தகவல் அறிந்து அப்பகுதி இஸ்லாமியர்கள் கன்னியாகுமரி நாகர்கோவில் சாலையில் மறியல் செய்தனர்.
8/ 9
இதையடுத்து அங்கு வந்த கன்னியாகுமரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
9/ 9
இச்சம்பவம் காரணமாக கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.. செய்தியாளர் - ஐ.சரவணன் , நாகர்கோவில்