மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரபகுதியில் கேரளாவிலிருந்து அதிகளவில் யானைகள் முகாமிடுவது வழக்கம்.
2/ 7
இந்நிலையில் கோதையாறு அருகே மோதிரமலை கோலஞ்சிமடம் பகுதியில் 50வயது மதிக்கதக்க பெண்யானை ஒன்று நடக்க முடியாமல் காயங்களுடன் தவித்து வந்ததை அப்பகுதியிலுள்ள பழங்குடியின மக்கள் பார்த்து களியல் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர்.
3/ 7
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் மருத்துவ குழுவினர் பெண் யானையை ஆய்வு செய்தனர்.
4/ 7
அப்போது அந்த யானையின் இடது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வந்த நிலையில் பலனின்றி யானை உயிரிழந்தது.
5/ 7
இதையடுத்து மாவட்ட உதவி வன பாதுகாவலர் சிவகுமார் முன்னிலையில் திருநெல்வேலி மண்டல வன கால்நடை உதவி மருத்துவர் மனோகரன், தலைமையிலான வன கால்நடை மருத்துவகுழுவினர் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனர்.
6/ 7
அதை தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் யானையின் உடல் அப்பகுதியில் புதைக்கபட்டது. இதையடுத்து வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் யானை உயரத்திலிருந்து விழுந்ததில் கால் முறிந்துள்ளதால் ஏற்பட்ட வலி தாங்காமல் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
7/ 7
எனினும் உயிரிழந்த யானைக்கு நோய்தாக்கம் உள்ளதா அல்லது யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்