இந்த திருவிழாவிற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் வருகை புரிந்தனர். அவர்கள் நம்மிடம் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா போன்ற கொடிய நோய்களால் திருவிழா தடைப்பட்டுப் போனதாகவும் அதனால் நாங்கள் மிகவும் மன வருத்தத்தில் இருந்ததாகவும் இந்த ஆண்டு திருவிழா மீண்டும் நடைபெறுவதால் நாங்கள் மிக சந்தோஷம் அடைகிறோம் இது எங்களுக்கான திருவிழா. இரவு தாலி கட்டி மறுநாள் தாலியை தொடர்ந்து செல்லும் போதும் நாங்கள் சந்தோசமாக செல்வோம் எனவும் கூறினர்.
தமிழகம், கேரளா, ஒரிசா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகளும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு கோவிலுக்கு வந்து தங்களின் இஷ்ட தெய்வமான அரவான் என்றழைக்கப்படும் கூத்தாண்டவரை வணங்கி பூசாரிகளின் கைகளால் தாலி கட்டிக்கொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்து பேசியும் கும்மியடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.