அதன்படி, லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவரின் பரிந்துரையுடன் ஓசல்டாமிவிர் மருந்துகளை உட்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.