சுந்தர ராமு.. தமிழ் சினிமா நடிகர், நடனக் கலைஞர் என பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டிருப்பவர். இவரோடு டேட்டிங் டாப்பிக்தான் இப்போ கொஞ்சம் ட்ரெண்டிங்கில் இருக்கு. 30 வயது பெண்கள் முதல் 100 வயது பாட்டி வரை டேட்டிங்கில் ரவுண்ட் கட்டுகிறார் சுந்தர ராமு. இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும் நான் இன்னும் காதலை வெறுக்கவில்லை பாஸ் என்கிறார் கூலாக. இந்த டேட்டிங்கிக்கும் ஒரு இலக்கும் வெச்சிருக்கேன் . 365 டேட்டிங் அதான் என்னுடைய இலக்கு ஏறக்குறைய 335 பெண்களுடன் டேட்டிங் ஓவர் டார்க்கெட் ஃபினிஷ் செய்ய இன்னும் 30 டேட்டிங்தான் இருக்கு என்கிறார்.
பிபிசியில் தனது டேட்டிங்கின் நோக்கம் குறித்து விரிவாக பேசியுள்ளார் சுந்தர ராமு. ‘நான் ரொம்ப ரொமாண்டிக்கான ஆளுங்க. ஒவ்வொரு நாளும் காதலை தேடிக்கிட்டு இருக்கேன். என்னுடைய இந்த டேட்டிங் பெண்களை சந்திப்பது எதோ கதையளந்து சாப்பிட்டு வருவது இல்லை. இந்தியாவில் பெண்கள் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்ததான் இந்த முயற்சின்னு விளக்கம் கொடுக்கிறார்.
சுந்தர ராமுவோடு பேஸ்புக் பக்கத்துல ஒரு ரவுண்ட் பார்த்தா நிறைய ரொமாண்டிக் டேட்டிங் கதைகள் கிடைக்கும். யாருடனான டேட்டிங் என்ன விஷயங்கள் பேசுனாங்கன்னு பேஸ்புக்கில் ஒரு குட்டி ஸ்டோரி எழுதியிருக்கார். டேட்டிங் தொடர்பாக பேஸ்புக்கில்தான் முதல்ல போஸ்ட் போட்டிருக்கார். ஆரம்பத்துல முதல் 10 டேட்டிங் அவருக்கு தெரிந்தவர்கள் நெருக்கமானவர்களுடன் தான் இருந்துள்ளது. இவரது பேஸ்புக் பதிவுகள் பிரபலமடையவும் நிறைய டேட்டிங் ஆஃபர்கள் வந்துள்ளது. நடிகை ஸ்ரேயாகூட எல்லாம் டேட்டிங் போயிருக்காரு மனுஷன்.
இந்தியாவில் பெண்கள் மீதான சமூகப்பார்வைதான் சுந்தரின் இந்த டேட்டிங்-க்கு தூண்டுதலாக இருந்துள்ளது. சுந்தரராமு வீடு, அவர் படித்த பள்ளி என எங்கும் அவருக்கு ஆண், பெண் பாகுபாடு குறித்து பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை. சுந்தரராமு இந்த வெளியுலகை பார்த்தபோது தான் பாலின பாகுபாடுகள் வேரூன்றி இருப்பதை அவரால் புரிந்துக்கொள்ள முடிந்துள்ளது. உண்மையில் இந்த பாலின பாகுபாடு தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தவருக்கு இந்த டேட்டிங் ஐடியா கிடைத்துள்ளது. இந்தப் பிரச்னைக்கு ஆண்கள் ஒரு தீர்வாக இருக்க வேண்டும். டேட்டிங் போது நிறைய தவறான புரிதல்கள் உள்ளன. பெண்கள் என்பவர்கள் அழகான கால்களும், வளைவுகளையும் மட்டும் கொண்டவர்கள் அல்ல. ஒவ்வொரு பெண்களும் மற்ற பெண்களில் இருந்து வேறுபடுகிறார்கள் என்கிறார் சுந்தர ராமு.
என்னுடைய டேட்டிங் குறித்த உரையாடல்களை எழுதுவதன் மூலம் என்ன கடத்த விரும்புகிறேன் என்றால் நீங்கள் ஒரு ஆண் என்றால் மற்ற பாலினத்தின் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள். அப்போதுதான் அவர்களின் பிரச்னைகளை நீங்கள் இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள முடியும். ஆணாதிக்கம் ஆழமாக வேரூன்றிய ஒரு நாட்டையும் சமூகத்தையும் ஒரே இரவில் மாற்ற முடியும் என நினைத்தால் அது கேலிக்குறியது. ஆனால் ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த தலைமுறையில் இல்லையென்றால் அடுத்த தலைமுறைகளில் தீர்வு கிடைக்கட்டும் என முடித்துக்கொண்டார்.