வேலூரில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. வேலூரில் தனியார் சிமெண்ட் குடோனில் சாக்கு மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பதுக்கப்பட்டிருந்ததா என்பது குறித்தும் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வார்டு வாரியாக எண்கள் எழுதப்பட்டு பணம் கட்டிவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.