ஹோம் » போடோகல்லெரி » தமிழ்நாடு » ரயில் பெட்டி தயாரிப்பில் சாதனை படைக்கும் ICF நிறுவனம்... 70,000 பெட்டிகளை தயாரித்து அசத்தல்

ரயில் பெட்டி தயாரிப்பில் சாதனை படைக்கும் ICF நிறுவனம்... 70,000 பெட்டிகளை தயாரித்து அசத்தல்

ரயில் பெட்டிகளின் விலை குறைவாக இருப்பதால் 15 க்கும் மேற்பட்ட நாடுகள் ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட ரயில்பெட்டிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.

 • 14

  ரயில் பெட்டி தயாரிப்பில் சாதனை படைக்கும் ICF நிறுவனம்... 70,000 பெட்டிகளை தயாரித்து அசத்தல்

  பெரம்பூர் ஐசிஎப் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 70ஆயிரத்தை கடந்துள்ளது. ஐசிஎப் எனப்படும் பெரம்பூர் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  ரயில் பெட்டி தயாரிப்பில் சாதனை படைக்கும் ICF நிறுவனம்... 70,000 பெட்டிகளை தயாரித்து அசத்தல்

  ரயில் பெட்டி தயாரிப்பில் உலகளவில் சிறந்து விளங்கும் ஐசிஎப் நிறுவனம் கடந்த 1955 ம் தொடங்கப்பட்டது . வந்தே பாரத் , கதி சக்தி உட்பட இந்தியாவில் பயன்படுத்தப்படும் ரயில்களுக்கான பெட்டிகள் மட்டுமின்றி தான்சானியா , அங்கோலா , ஸ்ரீலங்கா , வங்கதேசம் , நேபாளம், மலேசியா , வியட்நாம் , பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஐசிஎப் நிறுவனம் ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கியுள்ளது .

  MORE
  GALLERIES

 • 34

  ரயில் பெட்டி தயாரிப்பில் சாதனை படைக்கும் ICF நிறுவனம்... 70,000 பெட்டிகளை தயாரித்து அசத்தல்

  மற்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ரயில் பெட்டிகளை காட்டிலும் ஐசிஎப் -ல் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளின் விலை குறைவாக இருப்பதால் 15 க்கும் மேற்பட்ட நாடுகள் ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்ட ரயில்பெட்டிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 44

  ரயில் பெட்டி தயாரிப்பில் சாதனை படைக்கும் ICF நிறுவனம்... 70,000 பெட்டிகளை தயாரித்து அசத்தல்

  இந்நிலையில் ஐசிஎப் நிறுவனத்தில் 70 ஆயிரமாவது ரயில் பெட்டி நேற்று தயாரிக்கப்பட்டதாக ஐசிஎப் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 27 வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் உட்பட 3, 100 ரயில் பெட்டிகளை தயாரிக்க ஐசிஎப் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 4 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES