

மழை காலம் தொடங்கியவுடன் இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பல ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருகை தந்து பிப்ரவரி , மார்ச் மாதங்களில் மீண்டும் தங்களது குஞ்சுகழுடன் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடும்.


ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக ஜூன் , ஜுலை மாதங்களில் பெய்த தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் பசுமை நிலவி வருகிறது.


இந்தாண்டு மக்கள் கொரோனா அச்சத்தில் வீட்டில் முடங்கி இருக்கின்ற சூழ்நிலையில் கொரோனா அச்சம் எங்களுக்கு இல்லை என்பது போல இரண்டு மாதங்களுக்கு முன்பே கூட்டம் கூட்டமாக வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகளான உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை போன்ற ஆயிரக்கனக்கான பறவைகள் தற்போது சீசனுக்கு முன்பே வந்துள்ளன .


இதுவரை பாம்புதாரா, நத்தை கொக்கி நாரை, மார்கழியன், கருநீல அரிவாள் மூக்கன் உள்ளிட்ட 10 வகையான பறவைகள் வருகை தந்து முட்டையிடுவதற்கு தற்போது கூடுகட்டுகிறது.