திருச்சி லால்குடி அருகே வயலில் முதலைகள் விளையாடியக் கொண்டிருந்ததை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2/ 8
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வானதிரையன் பாளையம் கிராமத்தில் மங்கள சீமான் ஏரி உள்ளது. ஏரிக்கரையின் அருகில் நின்று கொண்டிருந்த விவசாயிகள் முரளி, கோபி, ராசு, நடராசன் ஆகியோர் அருகில் வித்தியாசமான சத்தம் கேட்பது கண்டு அங்கு சென்று பார்த்துள்ளனர்.
3/ 8
அறுவடையான வயலில் இரண்டு முதலைகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஊர்மக்களுக்கு தகவல் கொடுத்து முதலைகளை பிடிக்க முயற்சித்தனர்.
4/ 8
இதில், பெரிய முதலை தப்பி ஓடி ஏரிக்குள் புகுந்தது. சிக்கிய சுமார் 5 அடி நீள குட்டி முதலையை பிடித்து கட்டி வைத்தனர்.
5/ 8
வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
6/ 8
முதலைகள் புள்ளம்பாடி வாய்க்கலில் இருந்து ஏரிக்கு வந்துள்ளன. முதலைகள் நடமாட்டம் குறித்து ஏற்கனவே வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
7/ 8
கடந்த ஆண்டு இதே பகுதியில் ஒரு முதலை பிடிபட்டது. தற்போது நள்ளிரவு நேரம் என்பதால் மனித உயிரிழப்பு ஏற்படாமல் நல்வாய்ப்பாக தப்பியுள்ளனர்.
8/ 8
எனவே இனியும் தாமதிக்காமல் இப்பகுதியில் உள்ள அனைத்து முதலைகளையும் பிடிக்க வேண்டும். மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.