கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக 7ம் தேதி ஒட்டுமொத்தமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.