எடப்பாடி தொகுதியில் ஆ.ராசா உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி தொகுதியில் திமுக துணைபொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Web Desk | March 28, 2021, 5:28 PM IST
1/ 9
எடப்பாடி தொகுதியில் திமுக துணைபொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2/ 9
திமுக எம்.பியும் துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது. இதுகுறித்து, அ.தி.மு.க சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
3/ 9
இதையடுத்து முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது ஆபாசமாக திட்டுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
4/ 9
இதனிடையே ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5/ 9
தமிழக முதல்வர் போட்டியிடும் சேலம் எடப்பாடி தொகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன பேரணி நடத்தினர். அப்போது ஆ.ராசாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
6/ 9
திமுகவினர் கண்ணியம் காக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
7/ 9
திமுக எம்.பி. ஆ.ராசாவின் உருவ பொம்மையுடன் கண்டன பேரணி சென்ற அதிமுகவினர்.
8/ 9
திமுக எம்.பி. ஆ.ராசா உருவ பொம்மையை எரிக்கும் அதிமுகவினர்.