மகா தீபத் திருவிழா நிறைவடைந்த நிலையில் தற்பொழுது தெப்பல் உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை சிறப்பு வழிபாடுகள் செய்து நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.