ஓசூரில் கிராம மக்களுடன் மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம்! புகைப்படத் தொகுப்பு
பெண்கள் சிறுவர்களின் உற்சாக வரவேற்பைக் கண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிராமத்திற்குள் சென்று, வீடு ஒன்றின் திண்ணையில் அமர்ந்து பெண்களுடன் கலந்துரையாடினார்.
ஓசூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2/ 6
பிரசார பொதுக்கூட்டம் முடிந்து திரும்பிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குமுதபள்ளி என்ற கிராமம் அருகே திரளான பெண்களும் சிறுவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
3/ 6
பெண்கள் சிறுவர்களின் உற்சாக வரவேற்பைக் கண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கிராமத்திற்குள் சென்று, வீடு ஒன்றின் திண்ணையில் அமர்ந்து பெண்களுடன் கலந்துரையாடினார்.
4/ 6
அப்போது கேஸ் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு ஆகியவற்றை சுட்டிக்காட்டி தங்களின் வேதனைகளை பெண்கள் எடுத்துரைத்தனர்.
5/ 6
பெண்களின் கோரிக்கைகளைக் கேட்டுக்கொண்ட திமுக தலைவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நம்முடைய ஆட்சி அமையும் போது உங்களின் குறைகள் அனைத்தும் களையப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
6/ 6
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளால் கிராம மக்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.