Anjaneya Swami Temple | 12 அடி உயரம் கொண்ட திண்டுக்கல் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் ( படங்கள் )
Anjaneya swami Temple | 12 வருடங்கள் பூர்த்தியடைந்த ஸ்ரீ வாஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அருள் பெற்றுச் சென்றனர்.
அருகே 12 அடி உயரத்தில் ஆன பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஏராளமான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
2/ 6
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ளது சுக்காம்பட்டி கிராமம். இங்கு அருள்மிகு ஸ்ரீ வாஸ்தீஸ்வரர் என்ற சிவாலயம் உள்ளது. இங்கு தற்பொழுது புதிதாக 12 அடி உயரத்தில் ஸ்ரீபஞ்சமுக ஆத்ம ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டது.
3/ 6
இதனையடுத்து இன்று 15.04.22 பஞ்சமுக ஆத்ம ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இரண்டு தினங்களாக வேத மந்திரங்கள் ஓத ஆச்சாரியார்கள் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம், என பல்வேறு ஹோமங்கள் செய்யப்பட்டது.
4/ 6
மேலும் காசி, ராமேஸ்வரம், கங்கா, யமுனா போன்ற புனித ஸ்தலங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீரை கும்பங்களில் வைத்து யாகங்கள் செய்யப்பட்டது.
5/ 6
வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத யாகசாலையில் இருந்து பூரண கும்பங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
6/ 6
இதைத்தொடர்ந்து 12 வருடங்கள் பூர்த்தியடைந்த ஸ்ரீ வாஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அருள் பெற்றுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செய்தியாளர் : சங்கர்