திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2/ 5
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது இதனையடுத்து நேற்று முதல் அரசு மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3/ 5
இந்நிலையில் திண்டுக்கல் புறநகர் பகுதியில் உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையில் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வருகிறது .
4/ 5
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் குடை மற்றும் ஆதார் அட்டை இல்லாதவர்கள் மது வாங்க அனுமதிப்பது கிடையாது அவர்களைத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
5/ 5
மேலும் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் ஆதார் அட்டை மற்றும் குடை கொண்டு வருவதற்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படுமென ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.