முள்ளங்கி அறுவடையை 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். 45 நாட்களுக்கு மேல் தாமதித்தால், முள்ளங்கி முற்றிவிடும். இந்நிலையில் அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளதால் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து விவசாயிகளிடம் கிலோ முள்ளங்கி 4 ரூபாய் முதல் 6 வரை கொள்முதல் செய்யப்படுவதால் பெரும் நஷ்டம் அடைவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.