தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2/ 5
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2ஆம் தேதி தென் தமிழக கடற்கரையை நெருங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3/ 5
இதன் காரணமாக டிசம்பர் 1,2,3 தேதிகளில் தெற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், தெற்குகேரளா ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
4/ 5
இதனிடையே, டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கன முதல் மிக கனமழை இருக்கும் என்பதால், தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
5/ 5
டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை அல்லது அதீத கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.