

நிவர் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.


புயல் நேரத்தில் மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, பேட்டரி, உலர்ந்த உணவுவகைகள், குடிநீர், மருந்துகள், குளுக்கோஸ், Band aid உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்.


ஏழு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்திருப்பது அவசியம்.


புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம்.


மந்தநிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும் என்பதால்இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து 'புயல் கடந்துவிட்டது' எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை வெளியில் செல்ல வேண்டாம்


பழுதடைந்த கட்டடங்களுக்குள் நுழைவதை தவிர்த்து, அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திற்கோ அல்லது பாதுகாப்பான கட்டடத்திற்கோ செல்லலாம்.


இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் TN SMART செயலி மூலம் பகிரப்படும் அதிகாரப்பூர்வமான அறிவுரைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்