தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டது. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கையில் உள்ளபோது மீண்டும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.