தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம்... பக்தர்கள் கண்குளிர தரிசனம்...!
சித்திரை திருவிழாவை முன்னிட்டு தஞ்சை பெரியகோயிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சித்திரை திருவிழா, கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. (படம்: தஞ்சாவூர் - குருசாமி)
2/ 9
18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் பெருவுடையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். (படம்: தஞ்சாவூர் - குருசாமி)
3/ 9
அத்துடன் தினமும் பரதநாட்டியமும் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடந்த்து. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. (படம்: தஞ்சாவூர் - குருசாமி)
4/ 9
அப்போது பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்- கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைந்தனர்.(படம்: தஞ்சாவூர் - குருசாமி)
5/ 9
அதன் பின்னர் தியாகராஜர்-கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைத்தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. (படம்: தஞ்சாவூர் - குருசாமி)
6/ 9
தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளிலும் தேர் வலம் வந்து 4 ராஜ வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்பட்டது.(படம்: தஞ்சாவூர் - குருசாமி)
7/ 9
(படம்: தஞ்சாவூர் - குருசாமி)
8/ 9
ராஜவீதிகளில் வலம் வந்த பெருவுடையாரைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். (படம்: தஞ்சாவூர் - குருசாமி)
9/ 9
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேரை அனைவரும் கண்குளிர தரிசனம் செய்து மகிழ்ந்தனர். (படம்: தஞ்சாவூர் - குருசாமி)