108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை தேர் உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். (படம்: கதிரவன் - திருச்சி)
2/ 10
மே 5-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவுக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேரின் மீது முகூர்த்தக் கால் நடப்பட்டது. (படம்: கதிரவன் - திருச்சி)
3/ 10
இதனை தொடர்ந்து 25-ம் தேதியான இன்று காலை சித்திரை தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. (படம்: கதிரவன் - திருச்சி)
4/ 10
இதற்கு முன்னதாக பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்றும் மண்டபத்திற்கு வந்துசேர்ந்தவுடன் தங்க கொடி மரத்தில் கொடியேற்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. (படம்: கதிரவன் - திருச்சி)
5/ 10
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். நம்பெருமாள் 28-ந்தேதி மாலை 6 மணிக்கு கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார். (படம்: கதிரவன் - திருச்சி)
6/ 10
மே 2-ந்தேதி காலை 7 மணிக்கு வண்டுலூர் சப்பரத்திலும், அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆண்டு தோறும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம். (படம்: கதிரவன் - திருச்சி)
7/ 10
இந்த ஆண்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்ச்சி மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. மாலை 6.30 மணிக்கு மேல் தங்க குதிரை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி சேவை தருகிறார். (படம்: கதிரவன் - திருச்சி)
8/ 10
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற மே 3-ம் தேதி நடக்கிறது. (படம்: கதிரவன் - திருச்சி)
9/ 10
5-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்கில் பெருமாள் வீதி உலா வருகிறார். அன்றைய தினம் பெருமாள் உபய நாச்சியாருடன் எழுந்தருளி திருத்தேர் வடம்பிடித்தல் நடைபெறும். (படம்: கதிரவன் - திருச்சி)
10/ 10
தை மற்றும் பங்குனி ஆகிய இரு தேரோட்டங்களில் மட்டுமே பெருமாள் எழுந்தருள்வார். ஆனால் சித்திரை தேரோட்டத்தில் மட்டுமே உபயநாச்சியர்களுடன் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. (படம்: கதிரவன் - திருச்சி)